நீ காதல் சொன்ன போது!
---------------------------------------------
காற்றுக்குள்ளும் உருவம் முளைத்தது
காதல் வந்த போது!
வேருக்குள்ளும் வியர்வை வடிந்தது
பார்வைகள் பரிமாறப்பட்டபோது!
தாய்மொழி விழி பிதுங்கியன - உன்
மௌன மொழித் தரிசிப்புக் கண்டு!
முகில் கூட்டங்கள் மெல்ல வுடைந்து
கற்கண்டாய் தரை தொட்டன !
உன் சிற்ப மேனி வர்ணமாய் வடிந்தென் .........
கற்பனைக் குடைகளை நனைத்தன!
திமிரெடுக்கும் அலைகளெல்லாம் வீரியமாய்
எகிறெடுத்தன என் வாலிப வோரங்களில்!
ஆசை ஜூவாலைக்குள் வீழ்ந்த கனவுகள்
இம்சையில் மேனி நெரித்தன கொஞ்சம்!
மூங்கில் துளையுடன் உன் குரலேந்தி
வருடுகின்றாய் மெல்லிசையாய் எனை அணைந்து !
புல்லரித்துக் கிடக்கின்றேன்
உன் புன்னகைப் போதையில்
நெஞ்சம் லேசாய் கிறங்கி!
---------------------------------------------
காற்றுக்குள்ளும் உருவம் முளைத்தது
காதல் வந்த போது!
வேருக்குள்ளும் வியர்வை வடிந்தது
பார்வைகள் பரிமாறப்பட்டபோது!
தாய்மொழி விழி பிதுங்கியன - உன்
மௌன மொழித் தரிசிப்புக் கண்டு!
முகில் கூட்டங்கள் மெல்ல வுடைந்து
கற்கண்டாய் தரை தொட்டன !
உன் சிற்ப மேனி வர்ணமாய் வடிந்தென் .........
கற்பனைக் குடைகளை நனைத்தன!
திமிரெடுக்கும் அலைகளெல்லாம் வீரியமாய்
எகிறெடுத்தன என் வாலிப வோரங்களில்!
ஆசை ஜூவாலைக்குள் வீழ்ந்த கனவுகள்
இம்சையில் மேனி நெரித்தன கொஞ்சம்!
மூங்கில் துளையுடன் உன் குரலேந்தி
வருடுகின்றாய் மெல்லிசையாய் எனை அணைந்து !
புல்லரித்துக் கிடக்கின்றேன்
உன் புன்னகைப் போதையில்
நெஞ்சம் லேசாய் கிறங்கி!
No comments:
Post a Comment