Friday, April 19, 2013

ஆழ் கனவுகளில் நீந்தி வந்து - என்னை
ஆழி நீங்கி கவர்ந்திட்டாய் கள்வா!

உன்னைக் கண்ட நொடிப்பொழுதிலிருந்தேதான்
காதலும்....
என்னை உளவு பார்க்கத் தொடங்கியது!

உன் குறுஞ்சிரிப்பும்
நறுக்கென்று
என்னைக் குட்டும் பார்வையும்........
அடிக்கடி என்னை உன்னுள் இடமாற்றி
சாதனை புரிகின்றதே சாகஸக்காரா!

உன் சிந்தனை வயல்களில் - நீ
எனை விதைத்து தினமும் ரசித்து
நாணமதை அறுவடை செய்கையில்
நானும் நாடி தளர்ந்துன் வசமாகின்றேன்
சிறு குழந்தையாய்!

விடியலைத் தொடாத அந்தகாரங்கள்....
பனிக்குள் வீழ்த்தி நம்மை பலாத்காரம் செய்கையில்.....
உன் அருகாமையின் வெம்மைக்காக
நானோ கூடுவிட்டுப் பாய்கிறேன் உன்னுள்.....
உன் அன்பை மொத்தமாய் சூறையாட!

No comments:

Post a Comment