Friday, April 19, 2013

சீதனம்
--------

பெண் மலர்களுக்கு இடப்படும்
முள்வேலி!

வாழ்க்கை வியாபாரத்திற்காய்
வழங்கப்படும் முதலீடு!

பெண்மையின் ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச்சீட்டு!

ஏழைக் கன்னியரின் சுயம்வரத்தின்
தடைக்கயிறு!

வருங்காலம் பேணும் திருமணத்திற்கான
அனுமதி!

தன் சந்ததி பெருக்கத்திற்கான
கைக்கூலி!

ஆண் வாழ்வின் செழிப்பிற்காய்
பெண்ணார் வழங்கும் நன்கொடை!

பட்டம் பதவிக் கேற்ப நிர்ணயிக்கப்படும்
பண்டம்!

சொகுசு வாழ்விற்காக தேடப்படும்
செல்வம்!

'சீ தனம் ' சொல்லாதோர் கையேந்தும்
பிச்சை!

ஏழைகளுக்கு தூக்குமேடை விதிக்கும்
அபராதம்

உழைக்காத சோம்பேறிகள் எதிர்பார்க்கும்
அதிஷ்டலாபம்!

No comments:

Post a Comment