Friday, April 19, 2013

என் சிந்தனையை பெயர்த்தெடுத்தாய்
உன் வசம்!

என் இருப்பிட நிழலுக்குள்
உன்னையும் திணிக்கத் துடித்தாய்!

எனைக் காண்கையில் உன் "கண்"ணால்
காயப்படுத்தி சிறையும் பிடித்தாய்!

என் மனதேசத்தில் உன்னையும்
ஆயுள்வரை நட்டினாய்!

என் நகர்வுகளை மோப்பம் பிடித்து
பின்தொடர்ந்தாய் உளவாளியாய்!

என் கன்னி விடுதலைக்கும்
நாள் குறித்தாய் முனைப்புடன்!

இத்தனைக்கும் நீயென் காதல் தீவிரவாதியென
பிரகடனம் செய்கின்றேன் என் மன்றலில்!

No comments:

Post a Comment