Friday, April 19, 2013

செந் தணல்கள் பூக்கையில்
முகாரி பாடும் குழல்கள் இவை!

அடக்குமுறைச் சவாரியில்
வீசப்படும் கடிவாளங்கள்!

மத வன்முறைக்குள்
நீட்டப்படும் அனல் விரல்கள்!

சன்னங்களின் சம்மதத்துடன்
சமாதி கட்டும் இயந்திரங்கள்!

பாதுகாப்பு வேலிக்காய்
நாட்டப்படும் கொடிகால்கள்!

கிளர்ச்சிக்காரர்களுக்கும்
உளத் தெம்பளிக்கும் விற்றமின்கள்!

துப்பாக்கி.......................
அப்பாவிகளின் சயனைட்!

No comments:

Post a Comment