Tuesday, April 23, 2013

ஒத்தயடி பாதை

என்னவளே :-

ஒத்தையில உன்னை காண நீ வரும் பாதையிலே
தனியாய் காத்து காத்துகிடந்தேனே நித்தம் நித்தம்
பெண்ணே என்னையறிந்து நீயும் தன்னந்தனியாய்
வந்து உன் ஓரபார்வையால் நீயோ பார்த்துவிட்டு செல்ல..

தவித்து போனேனே காதலில் பெண்ணே
ஆழ்கிணற்றிலே தூக்க ஆளில்லாமல்
தவிப்பதுபோல என் இதய கிணற்றிலே
நீ என்னை காணாமல் என் நினைவுகள் தவிக்குதே..

என்னவளே ஒத்தயடி பாதையிலே உன்னோடு
கைகோர்த்து வர ஆசையடி ஆனா பெண்ணே
ஒத்தயடி பாதை என்பதாலே உன்னோடு வர
முடியாமல் உன் பின்னாலே உன் நிழலைபோல்
கனவோடு வந்தேனே.. நீ போகும் பாதையெல்லாம்... ..

காலங்களும் சென்றதே தினம்தினம் என்
கனவினிலே என்னவளே உன் நினைவுதானே
ஒத்தயிலே தவிக்கவிட்டு சென்றவளே..

பெண்ணே உன்னை நேசிக்கும்போதும ்
என்னை கனவினிலே தவிக்கவிட்டவளே. .

நீ இல்லாதபோதும் உன் நினைவினிலே
தவிக்கவிட்டாயே என் நேசபறவையே...

பெண்ணே உன் நினைவுகளை என்னால்
தவிர்க்கமுடியலை யே என் வாழ்க்கை
பாதையிலே ஒத்தயடி பாதையாக உன்
நினைவு பயணம் தொடர்கிறதே..

சுகமாய் வலிக்குதே என் காதல் பயணத்தில்...... .

Credits:
என்றும் என்னவளின் நினைகளோடு

No comments:

Post a Comment