Friday, April 19, 2013

நாட்காட்டி காற்றோடு
சுதந்திரமாய்
காதல் பேசிக் கொண்டிருக்கின்றது.......

விடியலில் தொலைந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களெல்லாம்.......
வெட்கம் துறந்து விசாரித்துச் செல்கின்றன
நம் சந்திப்புக்களின் ஞாபகங்களை!

உன் மனசோர முடிச்சுக்களில்
வீழ்ந்து கிடந்த நான்.....
மெல்ல மெல்ல ஏக்கம் அவிழ்த்து
உன் வசமாகின்றேன் ........

உன் விரல் பற்றித் சுற்றித் திரிந்த
என் தெருக்களையெல்லாம்.........
பருவம் பூத்து காத்திருக்கின்றன
நம்முயிரின் அணுக்களில் விலங்கிட

என் கனவுச் சாரலில் அலைந்து திரிந்த
உன் முகவரிக்குள்...
எனை இடமாற்ற தவமிருக்கின்றன
என் ஆயுள் பக்கங்கள்!

No comments:

Post a Comment