- மருத்துவமனைவரவேற்பு அறையில் காத்திருப்பின் போதும்.. வங்கிகளில் காத்திருக்கும்போதும்...சில பயிற்சி வகுப்புகளின் போதும் அம்பேத்கார் ..அம்பேத்கார் ...என்று என் பெயரை கூப்பிடும்போது அந்த அறைகளில் அமர்ந்திருப்பவர்களின் கவனமெல்லாம் என்மேல் அவர்களின் ரியாக்ஷன் இருக்கே ..அப்போது.......எனக்கு ஏற்படும் சங்கடத்தை அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.........இதில் சீருடையில் இருந்தால் கேட்கவே வேண்டாம் அம்பேத்கார் என்ற பெயரை பார்த்தவுடன் ....பார்ப்பவர்களில் எத்தனைப்பேர் மறுமுறை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்............
- எத்தனையோமுறை இப்பெயருக்கான அதிர்வுகளை சந்தித்துஇருக்கிறேன்..
- காமராஜ். நேரு, காந்தி.அண்ணாதுரை, என்று பெயரை வைத்திருக்கும் யாரையும் நம் சமூகத்தில்அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று பார்ப்பத்திலை ஆனால் அம்பேத்கார் என்ற பெயரை ஒரு சாதியதலைவரின் பெயராகவும் அந்தவகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பெயராகவும் பார்ப்பதின் அர்த்தம் 36வருடங்களாக எனக்குப் புலப்படவில்லை
- என்ன காரணத்திற்காக எனது தந்தை இப்பெயரை எனக்கு வைத்தார் என்று தெரியவில்லை.....காரணம் கூற அவரும் தயாரில்லை கேட்க எனக்கும் மனமில்லை......ஒன்று மட்டும் உண்மை எனது தந்தைக்கு இந்த பெயரை வைக்க தூண்டியவர் இன்னொரு தந்தை [பெரியார்] என்பது மட்டும் எனக்கு விளங்கியது.
- .பிறப்பால் பிள்ளைமார் சமூகம் என்றாலும் என் வாழ்வில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தால் எவ்வளவு அவமானங்களை சந்திக்க நேரிடுமோ அந்த அளவிற்கு அவமானங்களை சந்தித்தும் ஏற்றுக்கொண்டும் வாழந்து வருகிறேன்......என்றைக்கு எனக்கு இந்த பெயரை எனது தந்தை வைத்தாரோ அன்றே அவரது [கதிர்வேல்பிள்ளை]பெயருக்குப்பின்னால் இருந்த பிள்ளையை எடுத்துவிட்டு கதிர்வேலாக மாற்றிக்கொண்டார்.....
- உங்களுக்கு தெரிந்த வேற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் யாராவது இப்பெயரை வைத்திருந்தால் எனக்கு ஏற்படும் அனுபவம் அவருக்கும் ஏற்பட்டிருக்கின்றதா என்றுதெரிந்துக்கொள்வேன்............
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
my guru AMBEDKAR Inspector of Police
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment