குத்தகை விட்ட
குளக்கரையில்
குழைந்து
காதல் செய்யும்
ஊராட்சி மன்ற
தலைவர்கள்.
ஊரை அரித்து
உலையில் இட்டு
அதை
உணவாய் உண்ணும்
உதவாக்கரை கவுன்சிலர்கள்.
மாநகராட்சி
ஒப்பந்தங்களை
கக்கத்தில் வைத்து
காசாக்க
கழுகாய் வட்டமிடும் வட்டங்கள்.
மாவட்டத்தில்
எத்தனை
ஊராட்சிகள்
என்றுகூட
தெரியாத
தட்டுவாணி மாவட்டங்கள்.
பீரடிச்சு
நாற்காலி யுத்தம் முடித்து
ஆடை கிழி விழா
நடத்தும்
விளங்காத தலைமையில் மேயர்கள்
தொகுதிக்கு
தகுதியே
இல்லாத
எம்.எல்.ஏக்கள்
கரண்டு கணக்கு
கார் கணக்கு
போன் கணக்கு
என கணக்கு காட்டியே
களைத்து மலைத்த எம்.பிக்கள்.
அதற்கு
ஜால்ரா
அடிக்கும்
மத்திய மந்திரிகள்.
உன் மீது
நானும்
என் மீது நீயும்
என வழக்கிட்டு வழக்கிட்டே
வழக்கங்கெட்ட முதலமைச்சர்கள்.
நீதியையும்
நிதியையும்
மாமன் மச்சான்
மருமகள் மனைவி
என குடும்பத்தாரிடமே
குத்தகைக்கு தரும்
மாநில அமைச்சர்கள்
எனக்கொரு
இந்தியா என
தேசத்தையே
இருநூறாய் கேட்கும்
மத்திய அமைச்சர்கள்.
இவர்களுக்கெல்லாம்
நலமுடன்
ஆசிவழங்க
பினாமியை ஒரு பிரதமர்.
அவருக்கு
ஆசிவழங்க
ஊர் சுற்றியே
நாட்டை அழிக்கும்
முதல் குடிமகன், மகள்.
இதுதான்
உலகமே
என் தேசத்து அரசியல்.
அரசியல் வாழ்கிறது
ஜனநாயகம் சாகிறது.
இல்லையில்லை கொள்ளுகிறார்கள். -தென்பாதியான்.
குளக்கரையில்
குழைந்து
காதல் செய்யும்
ஊராட்சி மன்ற
தலைவர்கள்.
ஊரை அரித்து
உலையில் இட்டு
அதை
உணவாய் உண்ணும்
உதவாக்கரை கவுன்சிலர்கள்.
மாநகராட்சி
ஒப்பந்தங்களை
கக்கத்தில் வைத்து
காசாக்க
கழுகாய் வட்டமிடும் வட்டங்கள்.
மாவட்டத்தில்
எத்தனை
ஊராட்சிகள்
என்றுகூட
தெரியாத
தட்டுவாணி மாவட்டங்கள்.
பீரடிச்சு
நாற்காலி யுத்தம் முடித்து
ஆடை கிழி விழா
நடத்தும்
விளங்காத தலைமையில் மேயர்கள்
தொகுதிக்கு
தகுதியே
இல்லாத
எம்.எல்.ஏக்கள்
கரண்டு கணக்கு
கார் கணக்கு
போன் கணக்கு
என கணக்கு காட்டியே
களைத்து மலைத்த எம்.பிக்கள்.
அதற்கு
ஜால்ரா
அடிக்கும்
மத்திய மந்திரிகள்.
உன் மீது
நானும்
என் மீது நீயும்
என வழக்கிட்டு வழக்கிட்டே
வழக்கங்கெட்ட முதலமைச்சர்கள்.
நீதியையும்
நிதியையும்
மாமன் மச்சான்
மருமகள் மனைவி
என குடும்பத்தாரிடமே
குத்தகைக்கு தரும்
மாநில அமைச்சர்கள்
எனக்கொரு
இந்தியா என
தேசத்தையே
இருநூறாய் கேட்கும்
மத்திய அமைச்சர்கள்.
இவர்களுக்கெல்லாம்
நலமுடன்
ஆசிவழங்க
பினாமியை ஒரு பிரதமர்.
அவருக்கு
ஆசிவழங்க
ஊர் சுற்றியே
நாட்டை அழிக்கும்
முதல் குடிமகன், மகள்.
இதுதான்
உலகமே
என் தேசத்து அரசியல்.
அரசியல் வாழ்கிறது
ஜனநாயகம் சாகிறது.
இல்லையில்லை கொள்ளுகிறார்கள். -தென்பாதியான்.
No comments:
Post a Comment