Sunday, February 10, 2013

ஏதோ இன்று 
உன்னை மறந்து விட்டேன் என்று 
மனதில் இறுமாப்புடன் 
இல்லை இல்லை 
போலி கௌரவத்துடன் 
தலை நிமிர்ந்து நடக்கின்றேன் 
மனமோ எள்ளி நகையாடுகின்றது 
தோற்றவனின் புலம்பல் 
இவ் உலகில் மாறுபடவில்லை என்று 

தெரியவில்லையடி அன்று
நான் செல்லும் பாதை
சரிதானா என்று
ஆனபோதும்
தாய் வழி நடக்கும்
சிறு குழந்தை நான் என
உன் வழித்தடம் தொடர்ந்தே
என் விழியன் தேடல் தொடர்ந்தேன்

மறு தாயாக எண்ணிவளே
மறந்துவிட்டு போனதென்ன ?

மங்கையவள் மௌனமும்
காதலே என சொல்லி
பொய்யான ஒன்றை நிஜம் என்கிறேன்
என் வாசலில் நீ வரமாட்டாய் என
மனது ஒரு ஓரமாக உணர்ந்தாலும்
மனது முழுவதுமாய் வியாபித்திருக்கிறதே
நான் உன் மேல் கொண்ட காதலின்
பச்சை குத்தப்பட்ட சில சுவடுகள் :

No comments:

Post a Comment