Friday, December 14, 2012

இது ஒரு மிருகத்திடம் சிக்கிய பெண்மையின் வலி!!!

ரொம்ப ஆபாசமா வெளிபடையான கவிதை உங்களுக்கு பிடிக்கலனா என்ன திட்டாதிங்க ....

இதை போஸ்ட் பண்ண நிறைய தடவை யோசித்தேன் ....

இருந்தாலும் மனசு கேக்கல

நீயா கணவா ...?

அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை­ . . .
உன்னுள் இருந்தமது போதை ஒருபுறம் . .
காமப் பசி மறுபுறம் . . .
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய் . . .காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்குக் கசிய மறுத்தது . . .
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி . . .ஒன்று . . . இரண்டு . . . மூன்று என . ..
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலைவிட மனது வலித்தது . . .உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது . . .வழமையாய்க் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது . . .எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது . . .இதைத்தானா "பெண் பொறுப்பதற்குப் பிறந்தவள்" என்றாய் அம்மா? . .
என் உயிரின் கடைசிச் சொட்டுபலம்வரை பொறுத்திருந்தேன் . . .
அப்பாடா . . .
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய் . . .
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின். . .குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன் . . .
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய் . . .
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த் துளிகள்
மௌனமாய் வழிந்தன . . .
சில நிமிட மௌனங்கள் . . .
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ . . .என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது . . .
உன் தாகம்
உன் தேவை - தீர்ந்ததால்
உனக்கு உறக்கம் . . .
என் வலி
என் அழுகை - ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன் . .

(பெண்ணின் உள்ளம் புரியாதவருக்கு
இது ஆபாசம்தான்)


No comments:

Post a Comment