Tuesday, October 30, 2012

அன்பை கடத்தும் கருவி!!

உன் உள்ளங்கைஉஷ்ணத்தில்
உருகி ஓடுகிறது
உயிர்தனை கரைக்கிறது
உன் மீது நான் கொண்ட
உண்மை காதல்....!

இறுக்க பிடித்து தான்
இருக்கிறாய் இருப்பினும்
இதயம் பறக்கிறது...!

இனிமை இசைதனை
இசைக்கிறது...!

ஆறாம் விரலாய் காதல்
ஆங்கே தோன்றியது...!

ஆண்மை நாணம்
ஆசனம் ஏறியது...!

ஆசையின் உச்சம் காண
ஆவலும் எழுப்பியது..!

அஞ்சு விரல்களும்
அன்பாய் என் விரல்களை
அனைக்க அறிந்து கொண்டேன்
அன்பை கடத்தும் கருவி
அழகி உன் விரல்கள்என்று...!


No comments:

Post a Comment