அன்னைக்கோர் ஆத்திசூடி
அம்மா.... -
என் உலகின்
ஆதவன் நீ....
இனியவைகள் குழைத்த
இனிப்பு நீ....
ஈதலின்
தலைவி நீ....
உண்மை இறையாய்
உள்ளவள் நீ....
ஊறு காலத்து
உறுதுணை நீ....
என்றும் நிலையாகும்
அன்பு நீ....
ஏதும் பழிக்கா
மொழியும் நீ....
ஐயம் பொழுதில்
அலறல் நீ....
ஒன்றும் வேண்டா
உள்ளம் நீ....
ஓடும் வாழ்வில்
ஊக்கம் நீ....
ஔவை(தாய்) எனும்
இறைபொருள் நீ....
ஃரினையில் எனை சேராமல்அழகு தமிழ் கவிக்ககாரணம் நீ....!..
No comments:
Post a Comment