Sunday, October 21, 2012

மொட்டு வெடித்து
பூக்கள் தாங்க ;
பூமி வந்த நிலவு
இவனோ???

தென்றல் வீசும் இமைகளால்,,,
திகட்ட பேசும் இதழ்களால்,,,
கொஞ்சிப் போகும் விரல்களால்,,,
என்னைக் கொல்லப் பிறந்தவனோ???

உறக்கத்தை உளரலாக்கி;
துன்பத்தை இன்பமாக்கி;
என் இரவுகளை எல்லாம்
அவன் உறவுகள்
ஆக்கிக் கொண்டவனோ...

ஒரு நிமிட
அசைவிலும்
என்னை அணுஅணுவாய்
தின்றவனோ???

என் மொத்த உயிரையும்
அவன் ஒரு
இதழ் முத்தத்தில்
வைத்தவனோ????

சிறிதேனும் என் மனம்
கதறுவதை அவன்
புரிந்திருக்கவில்லையோ???

என் ஆத்மாவில்
கலந்து விட்டான்;
இனி என் ஆயுள் முழுவதும்
அவன் அன்பை வேண்டுகிறேன்...

எத்தனை கவிதைகள்
எழுத்துக்களானாலும்;
எழுதப் படாத என்
மனம் - தினம்
ஏங்கிக் கிடப்பது
அவன் ஆறுதலான ஒரு
வார்த்தைக்காக மட்டுமே...

ஜென்மம் இத்தனை தான்
என்று ,யாரும் உணர்ந்திருக்கவில்லை...
எந்த ஜனனம் அவனுடன்
உண்டான என் உறவு
முடிந்திருக்கவில்லையோ???
இந்த நிமிடமும் தவிக்கிறேன்...
அவனுக்காய்...

நொடியேனும் உன்னை
பிரிய நினைக்காத என்னை
என்ன நினைத்தாய்???
நீ எட்டி இருந்ததும்
உன்னை விட்டுச்
செல்வேன் என்றா???

போதுமடா,,,
என் காதலா!!!

இனிமேல் பிறப்பு எதற்கு?
நீ வாழ்ந்த பூமியில்
நான் வாழ்ந்த பின்னே...

சொர்க்கத்தை
பார்த்து விட்டேன்,,,
போதையூட்டும்
உன் கண்களிலே...

மீத ஆயுளையும்
கடந்து விடுவேன்;;;
உன் மூச்சுக் காற்றை
நேசித்த படியே...

No comments:

Post a Comment