Wednesday, October 3, 2012

பாரதி!!!

பாரதியின் செந்தமிழ்நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்லகாதல் புரியும் அரம்பையர் போல்- இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி - எனமேவிய யாறு பலவோடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்றுமொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்எத்தனையுண்டு புவிமீதே - அவையாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்றுநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வடமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்லபல்விதமாயின சாத்திரத்தின் - மணம்பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சைஅள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணியாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதியதீவு பலவினுஞ் சென்றேறி - அங்குதங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்தேசம் பலவும் புகழ்வீசிக் - கலைஞானம் படைத் தொழில் வாணிபமும் -மிகநன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

®@$@


No comments:

Post a Comment