Monday, November 19, 2012

மறந்துவிடாதே

. நினைவுச் சாலையிலே
நல்லதிகாலையிலே
இந்திர வில்லெடுத்து
இதோவருகிறேன்
மனங்கொத்தி பறவையே
மறைந்துவிடாதே

எங்கிருந்து ஈர்ப்புவிசை வந்தது
என்னையும் உன்னையு
ம்கட்டிப் போட்டது
காணாத கண்ணிமைக்கும்
நேரம்கூட சுடுகிறது
காற்று வந்து சாமரம்
வீசிவீசி செல்கிறது .

நீ தொலைத்த முகவரிக்கு
தெருமுனையில்
கோயில்கட்டி வைத்தேன்

அள்ளி கொடுக்க வசதியாய்
அத்தனையும்தானம் செய்து கொடுத்தேன்

பூக்களையும் கேட்டுப் பார்த்தேன்
பூகுடையும் வண்டுகளையும்
கேட்டுப் பார்த்தேன்
அருவியிடம் கேட்டுப் பார்த்தேன்
அங்கு பாய்ச்சலிடும் மானிடமும்
கேட்டுப் பார்த்தேன்

மானிடம் முழுதுமே ஓரழகி –நீயென்
மானுடம் செழிக்கவந்த பேரழகி

பாட்டு பூக்களெடுத்து
பாசநாரில் தொடுத்து
மாலை கொண்டு
இதோ வருகிறேன்

மன்மத தேசராணியே
மறைந்துவிடாதே.
                 ராசா

No comments:

Post a Comment