பாடப் புத்தகமோ
படிக்க வரவோ
இன்று தொடங்கி
நாளை முடிய
என்ன தரவோ
கரும்புக்காடோ
கடிக்க வரவோ
எறும்பாய் ஊர்ந்து
எல்லாம் தின்ன
எத்தனை நாளோ
பூக்கள் வேர்க்கும்
பனிப் பொழுதோ
முகர்ந்து பார்த்து
விலைக்கு வாங்க
முட்கள் தடுக்குமோ
நடனப் பள்ளியோ
நாட்டியம் ஆடவோ
நாடகம் முழுதும்
நடத்தி முடிக்க
நாணம் தடுக்குமோ
காமன் பண்டிகையோ
காதல் செய்யவோ
கட்டிப் பிடித்து
வைத்தியம் செய்ய
கால்கள் கெஞ்சுமோ
அன்னப் பறவையோ
ஆரத் தழுவவோ
ஆதி தொடங்கி
அந்தம் முடிய
அல்லும் போயிடுமோ
அம்பும் சோர்ந்திடுமோ"!!!
சொல்லடி எந்தன்
செல்லக்கிளி!!!!
ராசா
No comments:
Post a Comment