Monday, November 19, 2012

மூன்றெழுத்து!!!

ஒற்றை வரியில் சொல்
அந்த மூன்றெழுத்து
இல்லை- என்னுடல் விட்டு பிரியும்
ஒரு மூன்றெழுத்து
கற்றை வார்குழலி
கண்ணே பூங்குழலி
உன்னைக்கண்ட நாள் முதலாய்க்கொண்டேன் அந்த மூன்றெழுத்து.

வித்தை கற்ற திருவாசகனே
என்னத்தை பெற்ற மணிவாசகனே
ஒற்றைச்சொல்லில் நீ சொல்லும்
வாசகமே எனக்கு திருவாசகமே
அற்றைத் திங்கள் நாள்முதலாய்
ஆடிப்பாடி மகிழ்ந்தோமே
ஒற்றை பனையின் கீழே
ஒருநாள் கள்ளும் உண்டாமே
பருவம் வந்த நாள்முதலாய்
பார்க்க முடியவில்லையே
பார்க்காமல் போனாலும்உருவம்
இன்னும் மறையவில்லையே
கத்தும் கடல் வற்றிப் போகலாம்
சுற்றும் பூமி நின்று போகலாம்
காயாது நம்காதல் பெண்ணே

குளிர் நிலவும் சுட்டெரிக்கலாம்
கோடையிலும் பனிவந்து குளிரலாம்
போகாது சோடை நம்காதலே
அணையாத காதல் நம்
காதல் அல்லவா
அணைபோட்டு தடுத்தாலும் நில்லாது ஆதவா.


No comments:

Post a Comment