செல்லமே...
என்று ஆசையாய்
ஒற்றை வார்த்தை ஆரம்பிப்பாய்....
என் கொஞ்சலிலும்உன் கெஞ்சலிலும் - நம்
இரவுப் பொழுது நகர மறுக்கும்
இதயங்கள் இடம் மாறியதால்
எதிர்பார்ப்புகள் இருவரிடமும்
இணையாய் இருந்தன...
காதலைப் பகிர்வதில்
ஆரம்பிக்கும் வேகத்தில்
மெதுவாய் உன் தோள் சாய்வேன்
கேசம் ஒதுக்கி தலை கோதும்
உன் விரல்களில் காண்பேன்
உன் எல்லையில்லா நேசத்தை...!
உன் காதல் சொல்லி
கவிதையாய்...என் காதினை மெல்லக் கடிக்கும்
உன் காத்திருத்தலின்
வேகத்தை என்
இதழ்கள் மெல்ல உணரும்...
தனிமையில் தவிக்கும் போதெல்லாம்
குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து
உன் ஆக்கிரமிப்பை என்னுள் செலுத்தும்
ஆறுதல் சுவாசத்தை ஆழமாய் இழுப்பேன்...
உன் நேசத்தை என்னிடம்
கொட்டுவாய்
தூறலாய்...
"பெய்யும் மழையில் கூட
பிழைகள் இருக்கலாம் - என்
செல்லமே! உன்னிடம் எங்ஙனம்
பிழையைக் காண்பேன்...?? - நான்
பிழையின்றி எங்ஙனம் உனை கடப்பேன்??
"வைர வரிகளாய் உன்
வார்த்தைகள் கண்டு
என் கண்களின் நீர்த்துளி மௌனமாய்
வெளியேறி விழுவதை
அவசரமாய்த் தடுப்பாய்!
பிறப்பின் பயனை
அடைந்ததை அறிந்தவன்
மெல்லமாய் உன் மார்போடு சாய்வேன்
இதமாய் என இதழிகளில் உன்
இதழ்களை பதிப்பாயே - இதைத் தவிர
இன்னுமோர் சுகமும் உண்டோ......
ராசா
No comments:
Post a Comment