கண்ணிலே மனத்திலே
காணாமல் வாடி
என்னுள்ளே நான் நொந்து
ஏங்கி மடிகிறேன்..!
காமமும் கோபமும்
கொள்ளை, கொலையென
பொய்மைப் புளுகுகளும்
சதிராடும் பூமியிலே...!
பதவிக்கும் பணத்துக்கும்
போட்டி இங்கே –வெறும்
புகழுக்கும் மாலைக்கும்
ஆசை இங்கே...!
நீதி நெறியினில்
நேர்மை வழியினில்யார் இங்கு வாழ்கிறார் தேடுகிறேன், தேடித் தோற்றுவிட்டேன்.அன்புக்கும், மெய்மைக்கும் அகிலத்திலே – இன்று அர்த்தமுண்டோ...?
இங்கு ஏற்றம் உண்டோ??
எங்கும் சுயநலம்,
எதிலும் சுயநலம்!
இங்கு வாழ்ந்திடுமோ
உண்மை மானிடமே!!!
No comments:
Post a Comment