Saturday, September 8, 2012

சிரிக்க சிந்திக்க

சிரிக்க சிந்திக்க..என்னங்க..!இன்றைக்கு நம்ம கல்யாண நாளுங்க..!அதுக்கு என்ன இப்போ..?நீங்க என்னை பொண்ணு பார்க்கவந்தது ஞாபகத்துக்கு வருது..!ஹி..ஹி..ஆமாம்அது ஒரு மறக்க முயாத நாள்தான்..!அன்றைக்கு உங்க முன்னாடி உக்காந்து நான் வீணைவாசிச்சேன்..நீங்க கண்ணை மூடி அதை ரசிச்சீங்க..!எனக்கு எப்போதுமே சங்கீதத்துலேஓர்ஈடுபாடு உண்டு..பறவைகளிலே கூட எனக்கு ரொம்பவும்பிடிச்சது குயில்தான்..!அப்படியா..?அது இருக்கட்டும்..இப்ப ஒரு கேள்வி கேக்கறேன்..பதில் சொல்லு பார்ப்போம்..!கேளுங்க..இனிமாயா கூவறதுஆண் குயிலா..?பெண் குயிலா..?இது என்ன கேள்வி....!பெண் குயிலாத்தான் இருக்கணும்..!இப்படித்தான் பலபேர்நினைச்சிக்கிட்டிருக்காங்க..அது தப்பு..அப்படின்னா..?உண்மையிலேயேஆண் குயில்தான் மனசைக் கவரக் கூடியஇனிய ஓசையை எழுப்புது..!எதுக்காக..?வசந்தகாலம் குயில்களின் இனப் பெருக்கத்துக்குஏற்றகாலம்..பெண் குயில்களைவசீகரிக்கறதுக்குத்தான் ஆண்குயில்கள் அப்படி இனிய ஓசையை எழுப்புது..!ஆண் குயில் காகம் மாதிரிக் கறுப்பா இருக்கும்..பெண் குயில் கொஞ்சம் சாம்பல்நிறமா இருக்கும்..உடம்புலே சின்னச் சின்னவெண்ணிறப் புள்ளிகள் இருக்கும்..!உங்களுக்குச் சங்கீதம் மட்டுமில்லே...சயின்ஸூம்நல்லா தெரிஞ்சிருக்கே..!இதை நீ தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு காலம்ஆயிருக்கு..!அப்படிச் சொல்லாதீங்க..எனக்கு அப்பவே தெரியும்..!எப்பவே..?என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்பவே..!என்ன தெரியும்..?நீங்க ஒரு கலா ரசிகர்ன்னு..!எப்படி தெரியும்..?நான் வீணையை கையிலே எடுத்து ஓர்அஞ்சு நிமிஷம்வாசிச்சவுடனே ஓடி வந்துஎன் கையைப் பிடிச்சுகிட்டுப் பாராட்டினீங்களே..!அது ஏனு தெரியுமா..?ஏனாம்..?நீ மறுபடியும் வாசிக்கஆரம்பிச்சுடப்புடாதுஎன்பதற்தகாகத்தான்..!நன்றி:சொர்க்கம்வாழ். தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள்.


No comments:

Post a Comment