Thursday, May 16, 2013

என் உறவுகள் அனைத்தும்
என் நலம் விரும்பி

நேசிக்காத உன்னை
மறந்து விட சொல்லி
என்னிடம் அன்புக் கட்டளையிட

என் இதயமோ உன்னை
தவிர வேறு எதையும்
சிந்திக்காமல் -உன்
நினைவுகளுடனே வாழசொல்கிறது...

நண்பர்கள் கொண்ட அக்கறை
என் மனதில் ஆழமாக
பதிந்தாலும் -உன்னை
உன்னை மறக்க சொன்ன
வார்த்தைகளின் வலி

என் இதயத்தில்
முள்ளாக குத்த
துடிக்கும் என் இதயத்தின்
வலிகளை யாரிடம் சொல்லி அழுவதென
தெரியாமல் தவிக்கிறது...

நேசித்தவனின் நினைவுகள்
என் நெஞ்சில் இருக்க ...

நண்பர்களின் ஆறுதல்
என்னில் இருக்க
உன் நினைவுடன் மடிவேன் மண்ணில் ...

No comments:

Post a Comment