இதற்கு நீயும்(நானும்) விதிவிலக்கல்ல!
வாழ்க்கை என்ற வீதியில்
நான் திரிந்த வேளையில்
என்னுடைய பார்வையில்
நிழல்களை துரத்தியடிக்கும் வெயில்,
அசுத்தப்படும் ஈக்கள்
சில இடங்களில் பூக்கள்
சில இடங்களில் கற்கள்
இடமில்லாமல் சாலையில் கிடக்கும் குப்பைகள்
காண்போரையெல்லாம் குரைக்கும் நாய்கள்
வசைமொழி வாய்மொழியாகிக் கொண்டிருக்கின்றன.
சில கனவுகள் இன்னும்
இரவாகவே இருக்கின்றன விடியாமல்.
செய்முறையில்லா கல்விமுறை,
மாணவர்களை மரணத்துக்கு
இழுத்துச் செல்லும் தேர்வுமுறைகள்.
2020யை எதிர்பார்த்திருக்கும் நாடு
20 20யை ரசனையுடன் கண்டுகளிக்கும்
வேடிக்கை ஒரு பக்கம்.
நான் சென்ற வீதியில் இருந்து
திரும்பி வந்தேன் பீதியில்.
கடந்து வரவில்லை
கசங்கி வந்திருந்தேன்..
இதற்கு இந்த வீதியில் விளையாடும்
குழந்தைகளூம் விதிவிலக்கல்ல.
அந்த ஐந்து நிமிடம் பெய்த மழை
இவ்வனைத்தயும் மறக்கடிதன..
வாழ்க்கை என்ற வீதியில்
நான் திரிந்த வேளையில்
என்னுடைய பார்வையில்
நிழல்களை துரத்தியடிக்கும் வெயில்,
அசுத்தப்படும் ஈக்கள்
சில இடங்களில் பூக்கள்
சில இடங்களில் கற்கள்
இடமில்லாமல் சாலையில் கிடக்கும் குப்பைகள்
காண்போரையெல்லாம் குரைக்கும் நாய்கள்
வசைமொழி வாய்மொழியாகிக் கொண்டிருக்கின்றன.
சில கனவுகள் இன்னும்
இரவாகவே இருக்கின்றன விடியாமல்.
செய்முறையில்லா கல்விமுறை,
மாணவர்களை மரணத்துக்கு
இழுத்துச் செல்லும் தேர்வுமுறைகள்.
2020யை எதிர்பார்த்திருக்கும் நாடு
20 20யை ரசனையுடன் கண்டுகளிக்கும்
வேடிக்கை ஒரு பக்கம்.
நான் சென்ற வீதியில் இருந்து
திரும்பி வந்தேன் பீதியில்.
கடந்து வரவில்லை
கசங்கி வந்திருந்தேன்..
இதற்கு இந்த வீதியில் விளையாடும்
குழந்தைகளூம் விதிவிலக்கல்ல.
அந்த ஐந்து நிமிடம் பெய்த மழை
இவ்வனைத்தயும் மறக்கடிதன..
No comments:
Post a Comment