யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, June 2, 2014
உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!
அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில்
துடைத்துக்கொண்டது...!
காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...
No comments:
Post a Comment