Sunday, October 12, 2014

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும்
நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும்
குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர்
வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய்
உச்சிவரை நேர்வகிடெடுத்து
தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து
போகிறாள் அவள் !

1 comment:

  1. உங்களது கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ஒற்றைக் கவிஞன்.. நிறைய எழுதுங்கள், சிறப்பான எழுத்தை உள்ளுக்குள் மறைத்து வைக்க வேண்டாம். வலையுலகுக்கு புதியவர் என்பதால் நிறைய சந்தேகங்கள் இருக்கும், இருப்பின் தொடர்பு கொள்க : arasanunk@gmail.com.

    ReplyDelete