Sunday, April 6, 2014

தேய்வுராத தேசத்தின் குரல் !

பேச்சாயிதமேந்தி  தேய்வுராத
மூத்த குரல்...
பாலனே !
நீ
மடை உடைந்த
ஈழ எல்லைக்கோட்டை
உலகுணர
எடுத்துக்காட்டிவன்...

தடை பதிந்த
விடுதலை போராட்டத்தை
தலைநிமிர உரையாற்றிவன்...

நஞ்சு சுமந்த
மாவீரனை புலம்பெயர்ந்தவரிடமும்
புவியினரிடமும்
உயர்த்தி நிறுத்திவன்...

தாயகத்தை விலைப்பேசியவனை
அழல் நிறையும்
 பேச்சால் அடிக்கியாண்டவன்...

வலியுணர்ந்த காயத்தை
சபைவழியேற்றி புரட்சியாக்கிவன்...

குருதியாற்றில்  நனைந்த
தேசத்தை உறுதியோடு
பின்பற்றியவன்...

நிலைக்குலைந்த மக்கள்
வாழ்வு நிலையாகிட
தலைவனோடு நிலைத்திருந்தவன்...

பன்னாட்டு அவையங்களில்
புலிகளின் தாகம்
தமிழீழ தாயகமென்று
மார்தட்டி சொன்னவன் ...

பிரபாகரன் சகாப்தத்தில்
வலிமையுடைய மன்னவனாய்
வாழ்ந்து
தேசத்தின் குரலாய்
தகப்பனாய்  மூத்தவராய்
வாழ்கிறாய் பாலனே !!

No comments:

Post a Comment