Sunday, April 6, 2014

தமிழன்!தமிழன்!!             
தமிழன்!தமிழன்!!
கதைக்கு கதைக்க மட்டுமே
தமிழ் தமிழென்று
சொல்லுவோன்  தமிழனா?
நஞ்சை அணிந்து
ஆசை துறந்து
மண்ணுக்காய் போரிடுபவன்
தமிழனா?
தமிழருக்காய் வாழ்வையும்
தமிழுக்காய் தேசத்தையும்
படைப்பவன் அவனடா!
தமிழன்!தமிழன்!!
தாய்மொழியை தாரைவாத்து
கொடுப்பவன் தமிழனா?
வீரத்தோடு  உரிமை
காத்தவன் தமிழனா?
பதவி மோகத்தில்
மானம்  விதவன்
தமிழனா?
பறித்தவன் தமிழனா?
அடிமை மோகம்
நுகர்ந்தவனை
விளிகசெயதவன் எவனடா!
அவனே தமிழன்!
தமிழன் ! தமிழன்!!
இவன் தான் தமிழன்
நீதியற்ற துரோகியோடு
கூட்டுச்சேருபவன்  தமிழனா?
கொள்ளையடித்து  வயிறுவளர்ப்பவன்
தமிழனா?
இனமானம் பெரிதென 
தமிழனாய் எழுந்தவன்
எவனடா!
அவனே தலைவன்!
இவனே தமிழன்!!
தமிழன் இறங்கிபோகும்
படிகட்டுகளல்ல...
தரித்திரத்தை மடித்து
சரித்திரம் படைக்கும்
தலைக்கட்டுகள் ! !

No comments:

Post a Comment