Monday, April 14, 2014

நீதிக்கு சிறை தண்டனை
" 22 " ஆண்டாம்.

22 வருட வன வாசம்,
எத்தனையோ இழப்புக்களை
தந்து விட்டது.

வாழ்வை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

உறவுகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

இளமையை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

உரிமைகளை இழந்து
தினம்..!! தினம்..!! மரணம்.

இத்தனை
மரணத்தண்டனை தந்த உயிருக்கு,
இனியும் மரணமா..??

உன் தூக்கு கயிறு கூட இதை
ஏற்காது.

No comments:

Post a Comment