Sunday, March 3, 2013

அம்பேத்கார் என்ற ஆய்வாளர்!!!

அண்ணல் அம்பேத்கார் அரும்பெயரைப் பெற்றவனே!!!

அவர்பெயர் கொண்டதாலோ என்னவோ
அறவழியை நீ தேர்ந்தெடுத்தாயோ!!!

பார் போற்றும் விசித்திர
மனிதன் நீ-உன்னை
பார்ப்பவர்கள் வியக்கும்
சரித்திர மனிதன் நீ!

நீ!கால் பதிக்கும் இடமெல்லாம்
காவல்தெய்வம் ஐயனாரே
காரில் வந்ததாய் மக்கள் எண்ணினர்!!!

உந்தன் காலடி படுவதற்கு பல
ஊர்கள் தவம் கிடக்கின்றன!

உண்மைக்கும்,நேர்மைக்கும்
உறுதியாய் உழைத்தவனே!!
ஊரெல்லாம் உன்நாமம் உச்சரிக்க செய்தவனே!!!

கடமை,கண்ணியம் கட்டுப்பாட்டை தன்னிரு
கண்ணாய் கொண்டவனே!!!
காவலுக்கு தெய்வமாய் கடைசிவரை நிற்ப்பவனே!!-உன்னை

பார்ப்பவர்களை வசீகரிக்கும் பார்வையினை கொன்டவனே!!
பலநூறு எதிர்ப்புகளையும் பார்வையாலே கொன்றவனே!!!

எத்தனை தடைகள் எதிர்வந்தாலும் ஏறிமித்து
ஏற்றம்தனை நீ கண்டாய்!!!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாவலாய் நீ நின்றாய்!!!

வெண்ணையூர் நீவந்த பிறகு
என்னப்போல் எல்லோரும்
உன்பெயரே உச்சரித்தோம்!!!

தடுத்தாட்கொண்ட சிவனுள்ள ஊரில்
தவறுகளை தடுத்தாட்கொள்ள வந்துவிட்டு,

திடீரென்று இப்படி திசைமாறிச் சென்றால்
எங்கள் மனம் என்னபாடுபடும்!!!

வெண்ணையூர் மக்கள்தோரும் -
உன்னை ஒரு முதற் பிள்ளையாய் உணர்ந்துவிட்  இவ்வேளையிலே

என்னை விட்டுவிடுங்கள் என்றே நீயுறைத்தால்
எங்கள் உள்ளம் ஏற்க்க மறுப்பு இயல்பே!!!

தங்களைப் பிரிய மனமில்லாமல்
தாறுமாறய் ஏதோநான் கிறுக்கியது.
தவறிருந்தால் மன்னிக்கவும் சார்.

4 comments:

  1. உயிருள்ளவரை உங்களை மறவோம் சார்

    ReplyDelete
  2. ஏற்கனவே தொழுதூரில் இவர் வல்லரசுவாக வலம் வந்தவர்

    ReplyDelete
  3. ஏற்கனவே தொழுதூரில் இவர் வல்லரசுவாக வலம் வந்தவர்

    ReplyDelete
  4. ஏற்கனவே தொழுதூரில் இவர் வல்லரசுவாக வலம் வந்தவர்

    ReplyDelete