ஒரு தலை காதல்
உன்னை கண்ட நொடியில்
அழகின் உண்மையை அறிந்தேன்
உன்னை நேசிக்க துவங்கிய போது
வாசிக்கும் காதல் கவிதைகள் அனைத்திலும்
உன்னையே ஒப்பிட்டு திரு(டி)த்தி ரசித்தேன்...
திருத்தம் மட்டும் செய்ய தெரிந்த
எனக்கு கவிதையும் எழுத
கற்று தந்தது உந்தன் பேரழகு
காதல் எனும் அமுத சுரபியில்
நீந்துகிறேன் ஒரு தலையாய்
என்னோடு உன்னை சேர்க்க நினைத்து
இன்று வரை உன்னிடம் தோல்வி தான்
வெற்றியின் முதற் படிகட்டு தோல்வி
என்று நினைத்து கொண்டு . . .
ஏறி ஏறி இறங்குகிறேன் உன்னிடத்தில்...
துச்சம் என்று நீ என்னை பார்த்தால்கூட
அது போதும் என் வாழ்வின் உச்சம்
உன்னை கண்ட நொடியில்
அழகின் உண்மையை அறிந்தேன்
உன்னை நேசிக்க துவங்கிய போது
வாசிக்கும் காதல் கவிதைகள் அனைத்திலும்
உன்னையே ஒப்பிட்டு திரு(டி)த்தி ரசித்தேன்...
திருத்தம் மட்டும் செய்ய தெரிந்த
எனக்கு கவிதையும் எழுத
கற்று தந்தது உந்தன் பேரழகு
காதல் எனும் அமுத சுரபியில்
நீந்துகிறேன் ஒரு தலையாய்
என்னோடு உன்னை சேர்க்க நினைத்து
இன்று வரை உன்னிடம் தோல்வி தான்
வெற்றியின் முதற் படிகட்டு தோல்வி
என்று நினைத்து கொண்டு . . .
ஏறி ஏறி இறங்குகிறேன் உன்னிடத்தில்...
துச்சம் என்று நீ என்னை பார்த்தால்கூட
அது போதும் என் வாழ்வின் உச்சம்
No comments:
Post a Comment