{தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி}
கொடிக்காகத்-தன்னைக்
கொளுத்திக் கொண்ட உயிருண்டு;
உயிர்காக்கத்-தன்னைக்
கொளத்திக் கொண்ட கொடியுண்டா?
உண்டு;
அதன்பேர் செங்கொடி;
இனிமேல்-
அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம்-ஒரு
தொப்புள் எழுத்த கொடி;இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க-
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான்-
எனது-
வணக்கத்திற்குறிய கொடி!இதை-
வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு!-ஈடாக என்-
பூவுயிர் எடு!
என்று
எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும்-மூன்று
சேய்களைக் காத்த அன்னை!
ஆம்;
அந்தக்-
கன்னி தீயானால்; துயாகிக்-
கன்னித் தாயானால்!
மரண தண்டனைக்குத்தான்
மரண தண்டனை தர வேண்டும்!
செங்கொடியே! என் செல்ல மகளே!
சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை ஒப்பு;
என்றாலும்- அதை
ஏற்பதற்கில்லை; அது தப்பு!
-வாலி-
இப்படிக்கு
தோழர் செங்கொடி}
கொடிக்காகத்-தன்னைக்
கொளுத்திக் கொண்ட உயிருண்டு;
உயிர்காக்கத்-தன்னைக்
கொளத்திக் கொண்ட கொடியுண்டா?
உண்டு;
அதன்பேர் செங்கொடி;
இனிமேல்-
அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம்-ஒரு
தொப்புள் எழுத்த கொடி;இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க-
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான்-
எனது-
வணக்கத்திற்குறிய கொடி!இதை-
வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு!-ஈடாக என்-
பூவுயிர் எடு!
என்று
எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும்-மூன்று
சேய்களைக் காத்த அன்னை!
ஆம்;
அந்தக்-
கன்னி தீயானால்; துயாகிக்-
கன்னித் தாயானால்!
மரண தண்டனைக்குத்தான்
மரண தண்டனை தர வேண்டும்!
செங்கொடியே! என் செல்ல மகளே!
சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை ஒப்பு;
என்றாலும்- அதை
ஏற்பதற்கில்லை; அது தப்பு!
-வாலி-

No comments:
Post a Comment