மலையை மண்ணாக்கி
மண்ணை பொன்னாக்கி விண்ணை குடையாக்கி
வீடே அது வாக்கி
நாட்டை உருவாக்கி வளமாக்கினோம்
நாமே பலியாகி எருவாகினோம்!
அணையைப் பெரிதாக்கி அதிலே நீரைத்தேக்கி பாத்தி பிரிச்சி கட்டி
பயிரைப் பறிச்சி நட்டு
உணவை விளைவாக்கி மலையக்கினோம்
ஒட்டும் வயிராகும் நிலையாகினோம்!
கருத்தை வளமாக்கி
கரத்தை பலமாக்கி
பயத்தை இனிபோக்கி
பகையைத் துளாக்கி
உடமை பொது வாக்கி
பறை சாற்றுவோம்!
உழைப்போர் சொர்க்கத்தை உருவாக்குவோம்!......
No comments:
Post a Comment