Friday, September 23, 2011

எண்ணிப்பாரு

அழுதாத்தான் அம்மா கூட பாலுகுடுப்பா-கொழுந்தே

அமைதியாக படுத்திருந்தா சும்மா- இருப்பா!

உழுதாத்தான் பூமியிலே பயிர் விளையும்-

சும்மா
உழைக்காம இருந்தாக்கா புல்லு-மொளையும்

மந்திரத்தால் எங்காச்சும் மாங்கா விழுமா?

மன முயர்ச்சியில்லாம செல்வம் பெறுகுமா?

எந்திரம் போல் மனுசன் இங்கே வாழக்கூடாது

எத்தனுக்கு அஞ்சி தலை தாழக் கூடாது

ஒரு கையே தட்டும்போது ஓசை இருக்காது

உரிமைக் குரலே எழுப்பாம ஞாயம் பிறக்காது

வறுமை வறுமை என்று சொன்னா பசியடங்காது!

வயற்காட்டில் வெதைக்காம அரும்பி இருக்காது!

அசைஞ்சிகிட்டே இருந்தாத்தான் மனுசன்னு பேரு

அசையாம கிடந்தாக்கா சவமென்பாரு

திசை காட்டும் கருவிபோல மனசு இருக்கனும்

திடமாக அதே நோக்கி முன்னேற வேணும்

தண்ணிக்குள்ளே மீனுபோல அசைவிருக்கணும்

தடையைக் கண்டு அஞ்காம வழி நடக்கணும்

எண்ணி யெண்ணிப் பார்த்து நெசத்தே கண்டு பிடிக்கணும்-சிங்க

ஏறு போல வீரனென்னு பேரு எடுக்கணும்.....

No comments:

Post a Comment