Thursday, September 22, 2011

புதிய பாதை

பாதை தெரியுதடா நல்ல பாதை தெரியுதடா
பட்டினிப் பஞ்சம் பசிப்பிணி போக்கும்
பாதை தெரியுதடா....

கொட்ட மடித்தவர் கூட்டம் ஒழிந்து கொள்கை வழியிலே நின்று நிலைத்து வெட்டிப் பிரிந்தவர் எட்ட விலகிட நன்னெறியாளர் கண்ணொளி போல பாதை தெரியுதடா.....

கடல் அலைபோல படையுது பாராய்
விடுதலைப் படையின் குரல் கேளாய்
சட சடவென்று சாயுது தீமை
சங்கொலி ஓசை எங்கும் முழங்க பாதை தெரியுதடா.....

செங்கொடி ஏந்தி போரிட வாராய்!
சேவையின் சின்னம் அதுவே பாராய்!
சங்கநாதம் முழங்குது கேளாய்!
வேங்கைப் படைகள் எழுந்தது பாராய்!......

No comments:

Post a Comment