அன்பியல் ஓடையில்
நூற்றிதழ் தாமரையாய்
பூத்தவளே!
என்றன்
உயிரினுக்கே உயிரான
அன்னையே!
நீ என்னைப்
பெறவில்லை என்ற
உண்மை என்னவோ
உண்மைதான்
ஆம்! நீ என்னை
அறிவற்ற பிள்ளையாய்
பெறவில்லை என்ற
உண்மை என்னமோ உண்மைதான்!......
மணிமேகளையின்
கையிலுள்ள அமுதசுரபி
அள்ள, அள்ளக்
குறையாது என்று
சீத்தலைச் சாத்தன்
சாற்றியது என்னவோ
பொய்தான்!
என்னைப்
பொறுத்தவரையில்
என் அன்னையின் கைகளே
உண்மையான
அமுதசுரபி என்பதை
நான் கண்டு களிக்கிறேன்!
-ராசா-
நூற்றிதழ் தாமரையாய்
பூத்தவளே!
என்றன்
உயிரினுக்கே உயிரான
அன்னையே!
நீ என்னைப்
பெறவில்லை என்ற
உண்மை என்னவோ
உண்மைதான்
ஆம்! நீ என்னை
அறிவற்ற பிள்ளையாய்
பெறவில்லை என்ற
உண்மை என்னமோ உண்மைதான்!......
மணிமேகளையின்
கையிலுள்ள அமுதசுரபி
அள்ள, அள்ளக்
குறையாது என்று
சீத்தலைச் சாத்தன்
சாற்றியது என்னவோ
பொய்தான்!
என்னைப்
பொறுத்தவரையில்
என் அன்னையின் கைகளே
உண்மையான
அமுதசுரபி என்பதை
நான் கண்டு களிக்கிறேன்!
-ராசா-

No comments:
Post a Comment