Wednesday, September 25, 2013

நான் கடந்து வந்த காலங்களில்
பல உறவுகள்
பல நேரங்களில் என்னை கை விட்டு சென்றது
உன் நட்பினை தவிர

என் சோகங்கள் நான் சொல்ல
உன் கண்களிலே
என் கண்ணீர் துளிகளை பார்கிறேன்

சுற்றிகொண்டிருக்கும் உலகில் சுத்தமான
உறவு என்று
உன் நட்பினை மட்டும்தான் நான் உணர்கிறேன்

வாய் திறந்து காதல் என்று சொல்லிப்பார்
இரு
உதடுகளிலும் ஏற்படும் ஒரு பிரிவு
வாய் திறந்து நட்பு என்று சொல்லிப்பார்
இரு
உதடுகளிலும்  ஏற்படும் ஒரு இணைப்பு
அதுவே இறைவன்
நடப்புக்கு கொடுத்திருக்கும் மதிப்பு

உறவுகள் என்னை உதறிய போதும்
காதல் என்னை கை கழுவிய போதும்

என் வாழ்வின் உரிமை கொண்ட
உறவு என்று சொல்ல
உன் நட்பு  மட்டும் எனக்கு போதும்

நம் உயிரே நட்புக்கு சமர்பனமாகட்டும்
நம் நட்பு இந்த
உலகுக்கு ஒரு இலக்கனமாகட்டும்

நம் வாழ்வின் பயணம் நட்பின் பயனமாகட்டும்

நாம் வாழும் வரை நம் நட்பும் உயிர்
வாழட்டும்...

No comments:

Post a Comment