பெண்மை..!
ஐந்து இளைஞர்களுக்கு ஓர் ஆசை -
மலையேற வேண்டும் என்று.
மலை ஏறி இறங்கியபோது மழைவந்து விட்டது.
அடிவாரத்தில் இருந்த ஒரு குடிசைவீடு.
ஆசையாய் வரவேற்றான் குடிசைக்கிழவன்.
“ விடாதுமழை; இருந்து காலையில்
செல்லுங்கள் ’’ என்றான்.
தேநீர் கொடுத்தாள் கிழவனின் பேத்தி.
பதினாறுவயதுப் பட்டாம் பூச்சி. வஞ்சகத்தின்
நிழல்படியாத பிஞ்சுமுகம். பேதைமையும்
அச்சமும் பின்னி மிதக்கும் கண்கள். அவள்
பூமிக்கு மேலே ஒரு புதையல். ஐவரையும்
மேலே பரணில் படுக்கச் சொல்லிவிட்டுத்
துள்ளி மறைகிறது தாவணி மான்.
விடிகிறது; மழை ஓய்கிறது; ஐவரும்
விடைபெறும்நேரம்.
கதவின் பின்னால் நின்று கண்ணீர் மறைக்கும்
கண்களால் ஐவரையும் மாறிமாறிப் பார்க்கிறாள்
பேதைப் பெண். உள்மனதில்
ஒரு கேள்வி ஆடுகிறது:
“ உங்களில் யார் நேற்றிரவு என் பெண்மையைத்
திருடித் தின்றவன்? ’’
எப்போதோ படித்ததாக
''கவிப்பேரரசு வைரமுத்து '' சொன்ன
ஒரு கன்னடச் சிறுகதை.., என்
ஞாபகத்திலுருந்து உங்களுக்காக....,
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, January 8, 2015
பெண்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment