இழப்பென்று எதையும் நினைத்து
இறப்பென்று வரும் ? என்ற
இயந்திரத்தன வாழ்வுக்கு நடுவில் - என்
வாழ்க்கையின் சாஸ்திரவேர்கள் மட்டும்
இளமையிலேயே கருகிக் கொண்டிருப்பதேன்?
எதையோ தேடுகிறோம் என்றுணர்ந்த மனம்
எதையென்பதை மட்டும் உணர்த்த மறுத்து,
எழும்பும் அலையுடன் நீலக்கடலையும் ...
எங்கோ அதிலினையும் நீல வானையும்
எனக்குள் அடிக்கடி எடுத்துக்காட்டி
உயிருக்குள் உணர்த்தும் சேதியென்னெ?
சித்தனுக்கும் கிறுக்கனுக்கும்
ஒரு நூலிழை வித்தியாசமென்று
எங்கோ படித்த ஞாபகம்...
சித்தனா, கிறுக்கனா?
என் இன்றைய நிலையென்று
எனக்கே புரியாத மாயம்!
விழிகளை மூடித்திறக்கும் போதெல்லாம்
மூச்சுக்காற்றின் மூலஸ்தானத்தில்
முற்றிய தீயொன்று சுடர் விட்டெறிகிறது!
ஞானத் தீயா?
வேள்வித் தீயா?
காமத் தீயா?
காதல் தீயா?
ஒவ்வொருமுறை யோசிக்கும்போதும்
ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலொன்று-
உனக்குள் எரியும் இந்தத் " தீ " தான்
உன் உயிரை ஒருநாள் எரிக்குமென்று!
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, January 8, 2015
தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment