நீயில்லையென்றால்...
தூக்கமில்லாத இரவுகளோடு போராடித்
தோற்றுப்போனபோதும்
கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்!
நினைவுகளும் ஞாபகங்களும்
ஒவ்வொரு இரவிலும் என்னைக்
கொன்று போட்டாலும், உன்
நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன்
அதிகாலைகளில்...!
இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச்
சாலைகள் எனக்கு ,
பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது !
வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை!
சதா ரணமுமாய் சாவதைவிட
செத்துப்போனால் பரவாயில்லை
என்று தோன்றும்போது,
சில அசாதாரணங்கள் கூட....
சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ?
நான் செத்துத் தொலைந்தால் நன்றாய்
இருக்கும்!
No comments:
Post a Comment