Friday, June 7, 2013

தந்தை கைபிடித்து நடக்கையில்
தவறவிட்ட ஒருகால் செருப்பைத் தேடி
திரும்பிப் பார்த்தபடி நடக்கும்
மழலை
அணிந்து சென்ற
கம்மலில் ஒன்று
எங்கே விழுந்ததென்று
அம்மா முறைக்க
இரயில் பெட்டியில் தேடும் மகள்

அவசரமாய் அதிகாரி
அழைக்க, கிளம்புகையில்
வண்டி சாவியைத் துழாவும்
அடிமை
போலவே
நானும்.....
அரைத்தூக்கத்தில் விழித்து
அருகில் உன்னைத் தேடியபடி
இருக்கிறேன்..

No comments:

Post a Comment