ஈன்றவளும் பெண்ணே
ஈரத்தவளும் பெண்ணே
ஈன்றவள் தாயானாள்
ஈர்த்தவள் தாரமானாள்
தாயானவள் காட்டுவாள் பாசத்தை
தாரமானவள் காட்டுவாள் நேசத்தை
பாசமும், நேசமும்
புடை சுழ்வதே குடும்பமாகும்
குடும்பம் என்பது குதூகூலமாகும்
உயிருக்கு ஈடாய்
உயிரை பணயம் வைப்பாள் தாய்
உணர்வுக்கு ஈடாய்
உணர்வினை உணர்ந்து
நடப்பாள் தாரம்
தாயும் தாரமும் இரு கண்கள்
சேயும் சுகமும் இவர்களது எண்ணங்கள்
தாயினைத் துதிப்போம்
தாரத்தை மதிப்போம்!!!
No comments:
Post a Comment